Karti Chidambaram: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

karti-chidambaram
கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Karti Chidambaram: சீனர்களுக்கு விசா பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 7 நாள் வரை தங்களை அமலாக்க துறை கைது செய்யாமல் இருக்க அவகாசம் அளிக்க வேண்டும் மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்தது.

இதற்கு இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய தடை இல்லை என்றும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Karti Chidambaram’s anticipatory bail plea dismissed by Delhi court in money laundering case

இதையும் படிங்க: Corona Virus: தமிழகத்தில் 2 மாவட்டங்களில் தலைதூக்கும் கொரோனா