COVID-19 Vaccination: இந்தியாவில் 219.63 கோடியைக் கடந்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை

Mega vaccination drive tn : தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்
Mega vaccination drive tn : தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்

புதுடெல்லி: India’s Cumulative COVID-19 Vaccination Coverage exceeds 219.63 Cr. இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசியை பொறுத்தவரை இன்று காலை 7 மணி நிலவரப்படி 219.63 கோடிக்கும் அதிகமான (2,19,63,82,882) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.12 கோடிக்கும் அதிகமான (4,12,48,027) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,912 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.04 சதவீதமாக உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.78 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,723 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,41,06,656 ஆக உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,326 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 83,167 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 90.09 கோடி (90,09,66,082) வாராந்திரத் தொற்று 1.08 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.59 சதவீதமாக பதிவாகியுள்ளது.