பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டு வரப்படுவதை மாநிலங்கள் விரும்பவில்லை- மத்திய மந்திரி தகவல்

மத்திய மந்திரி தகவல்

Hardeep Singh Puri: டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவத்திற்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி ஹர்தீப் சிங் பூரி, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதை, ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டு வருவதை மகிழ்ச்சியுடன் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றார்.

ஆனால் மாநிலங்கள் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதுதான் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுமை பகிர்வு சமமாக இருக்க தேவையில்லை என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அதேபோல், மாநில அரசுகளும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரிகளை குறைப்பது தொடர்பாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ரஷியா – உக்ரைன் மோதல் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19.56 அமெரிக்க டாலரிலிருந்து 130 டாலராக உயர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோல்-டீசல் மீது மத்திய அரசு 32 ரூபாய் கலால் வரி விதித்தது, தீபாவளிக்கு முன்பு நாங்கள் அதைக் குறைத்தோம், விலைகள் குறைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் மீது, பாஜக ஆளும் மாநிலங்கள் பாஜக அல்லாத மாநிலங்களை விட பாதி அளவே வாட் வரியை வசூலிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு இடையே பெட்ரோல் சில்லறை விலை ரூ.15 முதல்
ரூ.20 வரை வித்தியாசம் உள்ளதாகவும் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

‘BJP states are charging half VAT compared to non-BJP states’: Union Minister Hardeep Singh Puri on fuel prices

இதையும் படிங்க: இந்தியாவிற்கு என்று தேசிய மொழி கிடையாது- நடிகை கங்கனா ரனாவத்