System Outage of LPG booking system of Indane: இண்டேன் கியாஸ் பதிவு செய்வதில் தாமதம்; நாளை முதல் சேவைகள் தொடரும்

புதுடெல்லி: System Outage of LPG booking system of Indane. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டேன் கியாஸ் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாக இண்டேன் விளங்குகிறது. இது இந்திய அரசாங்கத்தின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்திய சமையலறைகளுக்கு நவீனமயமாக்கலுக்காக 1964ல் இது உருவாக்கப்பட்டது. முதல் Indane LPG இணைப்பு 1965ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி கொல்கத்தாவில் வெளியிடப்பட்டது. இண்டேன்12,500 விநியோகஸ்தர்கள் நெட்வொர்க் மூலம் 130 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு சேவை செய்து வருகிறது.

இண்டேன் இந்தியா முழுவதும் 9,100க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களின் நெட்வொர்கை கொண்டுள்ளது. 6,250க்கும் மேற்பட்ட நகரங்களில் இது உள்ளது.  விற்பனை நெட்வொர்க் 45 இண்டேன் கிளை அலுவலகங்களால் நிர்வகிக்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் இண்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு மற்றும் விநியோகம் செய்வதில் கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்தது என்றும், தற்போது பிரச்சனை சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைமைப் பொது மேலாளர் சந்தீப் சர்மா கூறியுள்ளார்.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இண்டேன் கியாஸ் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில்நுட்பக் கோளாரை சரி செய்ய ஐபிஎம் மற்றும் ஆரக்கிள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பயனாளர்கள் வழக்கம்போல் தங்களது கேஸ் சிலிண்டர் பதிவை எஸ்எம்எஸ் அல்லது ஐவிஆர்எஸ் எண் 77189 55555 மூலமோ, மிஸ்டுகால் 84549 55555 அல்லது வாட்ஸ் அப் மூலம் 75888 88824 மூலமோ விநியோகஸ்தர்களை நேரிடையாகவோ அல்லது கேஷ் பில்லில் உள்ள தொலைபேசி எண் வாயிலாக நுகர்வோர்கள் தொடர்பு கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களின் பதிவு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கூடிய விரைவில் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். இன்று மாலைக்குள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு நாளை முதல் வழக்கம் போல் சேவைகள் தொடரும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.