Special trains : பயணிகளின் கூடுதல் நெரிசலை குறைக்க‌ சிறப்பு ரயில்கள்

பெங்களுரு: Special trains to reduce overcrowding of passengers : பயணிகள் கூடுதல் நெரிசலைக் குறைக்க தெற்கு மத்திய ரயில்வே பின்வரும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

  1. ரயில் எண். 07153/07154 நரசாபூர் – யஸ்வந்த்பூர் – நரசாபூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் (Narsapur – Yashwantpur – Narsapur Special Express) (ஒரு வழி பயணம் மட்டும்). அதன்படி ரயில் எண். 07153 நரசாபூர் – யஸ்வந்த்பூர் சிறப்பு விரைவு ரயில் நரசாபூரில் இருந்து 17.09.2022 (சனிக்கிழமை) மாலை 03:10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10:50 மணிக்கு யஸ்வந்த்பூரை வந்தடையும். மறு திசையில், ரயில் எண். 07154 யஸ்வந்த்பூர் – நரசாபூர் சிறப்பு விரைவு ரயில் யஸ்வந்த்பூரில் இருந்து 18.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 03:50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 08:30 மணிக்கு நரசபூரை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் (Special trains)பாலக்கொள்ளு, பீமாவரம் டவுன், அக்கிவிடு, கைகளூரு, குடிவாடா, விஜயவாடா, குண்டூர், நரசராவ்பேட்டை, டொனகொண்டா, மார்க்கப்பூர் சாலை, கிடல்லூர், நந்தியால், தோன், அனந்தப்பூர், தர்மாவரம், பெனுகொண்டா, இந்துப்பூர், எலஹங்கா நிலையங்கள் ஆகிய இடங்களில் இரு திசைகளிலும் நின்று செல்லும். இந்த ரயில்களில் 1 ஏசி 2 அடுக்கு, 2 – ஏசி-3 அடுக்கு, 10 – இரண்டாவது வகுப்பு ஸ்லீப்பர், 5 – பொது இரண்டாம் வகுப்பு மற்றும் 2 – இரண்டாம் வகுப்பு லக்கேஜ் மற்றும் பிரேக்-வேன்கள் (மொத்தம் 20 பெட்டிகள்) இந்த சிறப்பு ரயில்களின் கட்டணம் 1.3 என்ற விகிதத்தில் கூடுதலாக இருக்கும்.

  1. ரயில் எண். 07233/07234 ஹைதராபாத் – யஷ்வந்த்பூர் – ஹைதராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் (Hyderabad – Yashwantpur – Hyderabad Special Express) (ஒரு வழி பயணம் மட்டும்). அதன்படி, ரயில் எண். 07233 ஐதராபாத் – யஸ்வந்த்பூர் சிறப்பு விரைவு ரயில் 18.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 09:05 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10:50 மணிக்கு யஸ்வந்த்பூரை வந்தடையும்.
    மறு திசையில், ரயில் எண். 07234 யஸ்வந்த்பூர் – ஹைதராபாத் சிறப்பு விரைவு வண்டி யஸ்வந்த்பூரில் இருந்து 19.09.2022 (திங்கட்கிழமை) பிற்பகல் 03:50 மணிக்குப் புறப்பட்டு மாலை 05:00 மணிக்கு ஹைதராபாத் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் செகந்திராபாத், கச்சேகுடா, உம்தாநகர், ஷாத்நகர், ஜாட்சர்லா, மஹ்பூப்நகர், வனபர்த்தி சாலை, கட்வால், கர்னூல் சிட்டி, தோன், அனந்தபூர், தர்மாவரம், இந்துப்பூர் மற்றும் யெலஹங்கா நிலையங்கள் இரு திசைகளிலும் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் 3 – ஏசி-2 அடுக்கு, 6 ​​- ஏசி-3 அடுக்கு, 8 – இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர், 2 – பொது இரண்டாம் வகுப்பு, 1- இரண்டாம் வகுப்பு லக்கேஜ் கம் பிரேக்-வேன்கள் மற்றும் திவ்யாஞ்சன் மற்றும் 1 – லக்கேஜ் கம் பிரேக், ஜெனரேட்டருடன் கூடிய வேன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். (மொத்தம் 21 பெட்டிகள்). இந்த சிறப்பு ரயில்களின் கட்டணம் 1.3 என்ற வகையில் கூடுதலாக‌ இருக்கும் (Fees will be additional as per 1.3) என தெரிவிக்கப்பட்டுள்ளது.