Special Trains : ஹசூர் சாஹிப் நாந்தேடு-ஸ்ரீ சித்தரூதா ஸ்வாமிஜி ஹுப்பள்ளி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோப்புப்படம்

Special Trains : ஹுப்பள்ளி: ஹசூர் சாஹிப் நாந்தேடு-ஸ்ரீ சித்தரூதா ஸ்வாமிஜி ஹுப்பள்ளி இடையே சிறப்பு ரயில்களை (Hazur Sahib Nanded – Sri Siddharoodha Swamiji Hubballi) இயக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே (South Western Railway)வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கூட்ட‌ நெரிசலைக் குறைப்பதற்காக‌ ஹசூர் சாஹிப் நாந்தேடு-ஸ்ரீ சித்தரூதா ஸ்வாமிஜி ஹுப்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அந்த‌ சிறப்பு ரயில்களின் எண்கள், நிற்கும் ரயில் நிலையங்கள், அங்கு நிற்கும் நேரம் ஆகியவற்றின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன‌:-

ரயில் எண் (07635) ஹசூர் சாஹிப் நாந்தேடு-ஸ்ரீ சித்தரூதா ஸ்வாமிஜி ஹுப்பள்ளி (Sri Siddharoodha Swamiji Hubballi) இடையேயான சிறப்பு ரயில், ஜூலை 16, 23, 30-ஆம் தேதிகளில் (சனிக்கிழமைகளில்) பிற்பகல் 2:10 மணிக்கு ஹஸூர் சாஹிப் நாந்தேடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் (ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ஹுப்பள்ளி ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறு மார்க்கத்தில், ரயில் எண் (07636) ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ஹுப்பள்ளி – ஹசூர் சாஹிப் நாந்தேடு (Hazur Sahib Nanded) சிறப்பு ரயில், ஜூலை 17, 24, 31-ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 11:15 மணிக்கு ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ஹுப்பள்ளி நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் (திங்கட்கிழமைகளில்) காலை 8:10 மணிக்கு ஹசூர் சாஹிப் நாந்தேடு ரயில் நிலையத்தை சென்ற‌டையும்.

சிறப்பு ரயில் (07635) பூர்ணாவில் (02.40/02.45 PM) நின்று செல்லும். பர்பானி (03.13/03.15 PM), கங்காகேர் (03.49/03.50 PM), பார்லி வைஜ்நாத் (04.40/05.00 PM), லத்தூர் சாலை (06.50/07.10 PM), லத்தூர் (07.40/07.45 PM), உஸ்மானாபாத் (09.00/09.02 PM), பார்சி டவுன் (09.40/09.45 PM), குர்துவாடி (10.30/10.35 PM), பந்தர்பூர் (11.15/11.20 PM), சங்கோலா (11.45/11.47 PM), மிராஜ் (02.15/02.30 AM), கதபிரபா (03.48/03.50 AM), பெலகாவி (05.00/05.05 AM), லோண்டா (06.18/06.20 AM) மற்றும் தர்வாட் (07.50/07.52 AM) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் (07636) தார்வாட் (11.43/11.45 AM) நின்று செல்லும். லோண்டா (01.08/01.10 PM), பெலகாவி (02.05/02.10 PM), கதபிரபா (03.15/03.17 PM), மீராஜ் (05.30/05.45 PM), சங்கோலா (07.25/07.27 PM), பந்தர்பூர் (07.50/07.55 PM), குர்துவாடி (08.45/08.50 PM), பார்சி டவுன் (09.38/09.40 PM), உஸ்மானாபாத் (10.23/10.25 PM), லத்தூர் (12.10/12.15) காலை), லத்தூர் சாலை (01.00/01.20 AM), பர்லி வைஜ்நாத் (03.45/04.05 AM), கங்காகேர் (05.04/05.05 AM), பர்பானி (05.43/05.45 AM) மற்றும் பூர்ணா (06.30/06.35 AM) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Special Trains : ஒரு குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்புப் பெட்டி(AC First Class Coach), ஒரு 2 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி, 3 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள், பொது வகுப்பு வசதி கொண்ட 2 பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு லக்கேஜ், பிரேக்-வேன் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான ஒரு பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு லக்கேஜ், பிரேக்-வேன் மற்றும் ஜெனரேட்டர் உள்ள பெட்டி உள்ளிட்ட 13 பெட்டிகள் அந்த ரயில்களில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : Udupi court sentenced 20 years : மைனர் சிறுமி மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

Also Read : AIADMK office sealed case : அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பான வழக்கு : நாளை விசாரணை

Special Trains : Hazur Sahib Nanded – Sri Siddarbooth Swamiji Hubballi