Sharad Pawar : சரத் ​​பவாரின் உடல்நிலை பாதிப்பு : மருத்துவமனையில் அனுமதி

இது குறித்து NCP அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளது, பவார் உடல்நிலை சரியில்லாமல் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை: Sharad Pawar admitted :  தேசியவாத‌ காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத் பவாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 2 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 2 ஆம் தேதி சரத் பவார் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஷீரடியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்பார் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து NCP அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளது, பவார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் (Breach Candy Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் (Sarath Pawar was admitted to the hospital in April last year). அப்போது அவருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு, சரத் பவார் பாரத் ஜோடோ யாத்திரைக்கு (Bharat Jodo Yatra) ஆதரவு தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவுகான் மற்றும் பாலாசாகேப் தோரட் ஆகியோர் தன்னை சந்தித்து ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரைக்கு ஆதரவு அளிக்குமாறு அழைப்பு விடுத்ததாக சரத் பவார் கூறினார்.

குடியரசு தலைவர் தேர்தலில் (presidential election) எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் வேட்பாளராக சரத் பவார் போட்டியிடுவார் என தகவல் பரவியது. ஆனால் குடியரசு தலைவர் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் எதிர்க்கட்சி வேட்பாளராக குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.