Amit Shah : ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் : மத்திய உள்துறை அமித்ஷா

டெல்லி: Severe punishment for Shraddha murder case : Central Home minister Amit Shah :டெல்லியில் இளம் பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளிக்கு டெல்லி காவல் துறை கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது: நான் இந்த வழக்கு முழுவதையும் கவனித்து வருகிறேன். இந்த கொலை வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் அந்த குற்றவாளிக்கு (I will bring severe punishment to the criminal in a short period of time through the law) குறுகிய காலத்தில் கடுமையான தண்டனையை சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவேன். டெல்லி மற்றும் மும்பை காவல் துறைக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பு உள்ளது. ஆனால், மும்பை காவல் துறையில் ஷ்ரத்தா அளித்த புகாரில் தில்லி காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியாது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள துலின்ஜ் காவல் நிலையத்தில் ஷ்ரத்தா, அஃப்தாப் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், துண்டு துண்டாக வெட்டி விடுவார் எனவும் புகார் அளித்துள்ளார். அப்போது அவரது புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் மகாராஷ்டிரத்தில் எங்களுடைய ஆட்சி இல்லை (We have no rule in Maharashtra). இந்த கொலைக்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை டெல்லி காவல் துறை உறுதி செய்ய வேண்டும் என்றார்.