Security breach : பிரதமர் மோடியின் ஆந்திரா பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடு: ஹெலிகாப்டர் அருகே பறக்க விடப்பட்ட கருப்பு பலூன்

Black balloons released by Cong : பிரதமர் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும், ​​இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதம்.

ஆந்திரா : Security breach : பிரதமர் நரேந்திர மோடியின் ஆந்திரா பயணத்தின் போது அவர் பறந்த ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன் பறக்க விடப்பட்டது. காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்துக்கு ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி பயணம் செய்தபோது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. பிரதமர் மோடியின் ஆந்திர வருகைக்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பலூன் பறக்கவிட்டதால், அந்த இடத்தில் பதற்றமான சூழல் உருவானது.

சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராமராஜுவின் 125-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக கன்னவரத்தில் இருந்து பீமாவரத்திற்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரும் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் அருகே கருப்பு பலூன் பறந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை கண்டித்து ஆந்திர பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் ‘மோடி கோ பேக்’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘மோடி கோ பேக்’ என்ற வாசகம் அடங்கிய கருப்பு பலூனை கையில் ஏந்தியபடி ஆர்வலர்கள் அதை காற்றில் பறக்கவிட்டனர். இந்த பலூன் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சுற்றி பறந்ததால் பாதுகாப்புக் கோளாறுக்கு காரணமானது.

பிரதமர் எங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இது போன்ற செயல்களை மேற்கொள்வது சட்டவிரோதமானது. ஒரு சிறிய வெளிச்சம் கூட பிரதமர் மீது பட்டால் அதுவும் பாதுகாப்பு குறைபாடுகளின் கீழ் வருகிறது. மேலும் பாதுகாப்பு மீறல் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அந்தந்த மாநில அரசுகளின் முழுப் பொறுப்பாகும். இதையெல்லாம் அறிந்திருந்தும், இவ்வளவு பெரிய அளவிலான பாதுகாப்புக் குளறுபடிக்குக் காரணமான ஆந்திர அரசின் அலட்சியப் போக்கிற்கும், காங்கிரஸ் கட்சியினரின் செயலுக்கும் நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.