Accident Army Truck: ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 16 வீரர்கள் மரணம்: ராஜ்நாத் சிங் இரங்கல்

சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் (Accident Army Truck) பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சிக்கிம் மாநிலம், வடக்கில் இந்தியா சீனா எல்லைக்கு அருகாமையில் ஜெமா என்கின்ற இடத்தில் இருந்து 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். அப்போது ராணுவ வீர்கள் சென்ற ஒரு வாகனம் செங்குத்தான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயத்துடன் காணப்பட்டனர். அவர்களை ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர்.

இந்த விபத்து பற்றி கேள்விப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.

அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் இருக்கிறது. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.