SSC Result: தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி எழுத்துத் தேர்வு ரிசல்ட் வெளியீடு

புதுடெல்லி: Result of Written Examination of National Defence Academy and Naval Academy Examination (II), 2022. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாடமி எழுத்துத் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்தசெப்டம்பர் 4-ம் தேதியன்று நடத்திய, தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் கடற்படை அகாதெமி(II) கடற்படை நடத்திய தேர்வு முடிவுகளின் அடிப்படையில், பின்வரும் வரிசை எண்கள் கொண்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு அகாதெமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளில் சேருவதற்காக, பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ ஆள்சேர்ப்பு வாரியத்தின் 150-வது பாடப்பிரிவுக்கும், 112-வது இந்தியக் கடற்படை பிரிவுக்கும், 2023 ஜூலை 2-ம் தேதி நடத்தவுள்ள நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.upsc.gov.in. இணையதளத்திலும் காணலாம்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள், தேர்வில் சேருவதற்கான நிபந்தனைகளுக்கு இணங்க, தாற்காலிகமானது. எழுத்துத் தேர்வு முடிவுள் வெளியான இரண்டு வாரங்களுக்குள், இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு இணையதளமான joinindianarmy.nic.in -என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வெற்றி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு, ராணுவ ஆள்சேர்ப்பு வாரிய நேர்காணலுக்கான தேர்வு மையங்கள் மற்றும் தேதிகள் ஒதுக்கப்படும். அவை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் தெரிவிக்கப்படும். தளத்தில் ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இவ்வாறு செய்ய வேண்டிய தேவையில்லை. ஏதேனும் சந்தேகங்கள் அல்லது உள்நுழைவதில் பிரச்சினை இருந்தால், [email protected]. என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.

ராணுவ ஆள்சேர்ப்பு வாரிய நேர்காணலின்போது, விண்ணப்பதாரர்கள் வயது மற்றும் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழை அந்தந்த தேர்வு வாரியங்களில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள: Click Here