Agneepath scheme: வேலையில்லா இளைஞர்களுக்கு அக்னிப் பரீட்சை வேண்டாம்- ராகுல் காந்தி

rahul-gandhi
வேலையில்லா இளைஞர்களுக்கு அக்னிப் பரீட்சை வேண்டாம்- ராகுல் காந்தி

Agneepath scheme: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவி்த்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வேலையற்ற இளைஞர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:- பதவி இல்லை, ஓய்வூதியம் இல்லை, இரண்டு ஆண்டுகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை, ராணுவத்திற்கு உரிய மரியாதை இல்லை.

பிரதமர் அவர்களே, நாட்டின் வேலையற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள். அவர்களை அக்னிப் பாதையில் நடக்க விட்டு, அவர்களின் பொறுமை மீது அக்னிப் பரீட்சை நடத்த வேண்டாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: IPL media rights: ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்றது வயாகாம்18