Prithvi-2 missle: பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

Prithvi 2 missile successfully test

Prithvi-2 missle: உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பிருத்வி-2 புதன்கிழமை இரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்த‌ப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் சண்டிபூர் கடற்கரைப் பகுதியில் அனு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிருத்வி-2 ஏவுகணை புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது தரையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு 500 முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமார் 350 கி.மீ வரை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. பயிற்சி ரீதியாக நடைபெற்ற இந்த பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி, 2019-ஆம் ஆண்டு நவம்பரில் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

must Read : LPG Cyclinder: சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு

must read : இந்தியாவில் விரைவில் 5ஜி தொழில்நுட்ப சேவை

Prithvi 2 missile successfully test