PM to launch 5G services on Tomorrow: புதுடெல்லியில் 5ஜி சேவைகளை பிரதமர் நாளை தொடங்கிவைப்பு

புதுடெல்லி: PM to launch 5G services on 1st October. புதுடெல்லியில் 5ஜி சேவைகளை பிரதமர் நாளை தொடங்கிவைக்கிறார்.

புதிய தொழில்நுட்ப சகாப்தத்தை பயன்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்கிறார். 5ஜி தொழில்நுட்பம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிக்கும்.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி நடந்தது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.

ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல் ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது. அனைத்து நிறுவனங்களுக்கும் அலைகற்றை ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை பிரதமர் மோடி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்திய மொபைல் காங்கிரஸின் (ஐஎம்சி) ஆறாவது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐஎம்சி 2022 “புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்” என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான நடைமுறை மற்றும் பரவலில் இருந்து வெளிப்படும் தனித்துவமான வாய்ப்புகளை விவாதிக்கவும், காட்சிப்படுத்தவும் முன்னணி சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைக்கும்.