National Conference of Environment Ministers: வரும் 23ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு: தொடக்கி வைக்கிறார் பிரதமர்

ஏக்தா: PM to inaugurate National Conference of Environment Ministers of all States on 23rd September. குஜராத்தின் ஏக்தா நகரில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.23) காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டைத் பிரதமர்நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

கூட்டுறவு கூட்டாட்சியின் உணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில், பன்முக அணுகுமுறையின் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டை நீக்குதல்(Eliminating plastic pollution), காலநிலை மாற்றத்தை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கான மாநில செயல்திட்டங்கள் போன்ற விஷயங்களில் சிறந்த கொள்கைகளை வகுப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மேலும் ஒருங்கிணைப்பை உருவாக்கும் வகையில் மாநாடு கூட்டப்படுகிறது. பயன்பாட்டில் இல்லாத நிலத்தை மீட்டெடுப்பதற்கும், வனவிலங்குகளை பாதுகாப்பதற்கும் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வனப் பரப்பை அதிகரிப்பதில் இந்த மாநாடு கவனம் செலுத்தும்.

செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டில், வாழ்க்கை, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் (மாசுகளைத் தணித்தல் மற்றும் காலநிலை தாக்கங்களுக்கு ஏற்ப பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டங்களை மேம்படுத்துதல்), பரிவேஷ் (ஒருங்கிணைந்த பசுமை அனுமதிகளுக்கான ஒற்றை சாளர அமைப்பு) ; வன மேலாண்மை; மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, வனவிலங்கு மேலாண்மை (Wildlife management), பிளாஸ்டிக் மற்றும் கழிவு மேலாண்மையை கடைப்பிடித்தல் ஆகிய தலைப்புகளுடன் ஆறு கருப்பொருள் அமர்வுகள் நடைபெறும்.

நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ராஜு ஸ்ரீவஸ்தவா, நகைச்சுவை மற்றும் நேர்மறையான நடிப்பின் மூலம் நமது வாழ்க்கையை பிரகாசமாக்கினார். அவர் குறைந்த வயதில் நம்மை விட்டு பிரிந்து சென்ற போதிலும், அவர் பல ஆண்டுகளாக வெளிப்படுத்திய தனது செழுமையான நடிப்பால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.” என தன்னுடை இரங்கலை தெரிவித்துள்ளார்.