Odisha Chief Minister Naveen Patnaik ; முதலீடு செய்ய உகந்த மாநிலம் ஒடிசா: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

பெங்களூரு: Odisha is the best state to invest: முதலீடு செய்ய உகந்த மாநிலம் ஒடிசா விளங்குகிறது என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

பெங்களூரில் புதன்கிழமை ஒடிசா மாநாடு 2022 (Odisha Conclave 2022) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: தேசிய அளவில் கடந்த 20 ஆண்டுகளாக நிலையான அரசியல் உள்ள மாநிலமாக ஒடிசா விளங்குகிறது. கரோனாவிற்கு பிறகும் பொருளாதாரத்தில் தேசிய அளவை விட அதிகம் உள்ள மாநிலமாக ஒடிசா விளங்குகிறது. மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ள இந்த மாநிலத்தில் தாதுக்கள், நிலக்கரி, உருக்கு உள்ளிட்ட உற்பத்திகளில் தேசிய அளவில் முதல் மாநிலமாக ஒடிசா விளங்குகிறது.வேகமாக வளர்ச்சி அடையும் மாநிலமாகவும் உள்ளது.

தேசிய அளவில் முதலீடு செய்ய உகந்த மாநிலமாக கர்நாடகம், குறிப்பாக பெங்களூரு திகழ்கிறது. இங்கு முதலீடு செய்து உயர்ந்துள்ள பல நிறுவனங்கள் ஒடிசாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும். ஒடிசாவில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது (The state government has decided to give priority). 1 ஏக்கர் நிலத்தில் தங்கள் தொழில் நிறுவனங்களை தொடங்க வருபவர்களுக்கு 10 நாள்களுக்குள் அனைத்து வசதிகளையும் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல 5 ஏக்கர், 10 ஏக்கர் போன்ற நிலப்பரப்பில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு குறுகிய காலத்தில் அனைத்து வகையான ஒப்புதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலீடு செய்ய வருபவர்களிடன் நான் உள்ளிட்ட அதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா, அதிகாரிகள் யாரேனும் பிரச்னை செய்கின்றனரா என்ற தகவலை கேட்டு பெறுகிறோம். இதனால் முதலீடு செய்யப்பவர்களுக்கு எந்த பிரச்னையும், முறைகேடும் நடைபெறாத வகையில் நேர்மையான முறையில் ஒப்புதல் வழங்கப்படுகிறது. ஒடிசாவில் அனைத்து வளங்களும், சாலை, கடல், விமான வசதிகள் உள்ளிட்டவை சிறப்பாக உள்ளது (All the resources like road, sea and air facilities are excellent in Odisha). எனவே முதலீட்டாளர்கள் ஒடிசாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் செய்து தரப்படும் என்றார் அவர். நிகழ்ச்சியில் ஒடிசா மாநில தொழில்துறை அமைச்சர் பிரசாத் கேசரி தேப், முதன்மைச் செயலாளர் ஹேமந்த சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.