Nirmala Sitharaman discharge:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை டிஸ்சார்ஜ்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: Union Finance Minister Nirmala Sitharaman is likely to get discharged from AIIMS tomorrow. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) நேற்று அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதியம் 12 மணியளவில் மருத்துவமனையின் தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கமான பரிசோதனைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது. வயிற்றில் ஏற்பட்ட சிறிய தொற்று காரணமாக நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைந்து வருகிறார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.