Rahul Gandhi: தேசியக் கொடி தனி நபருக்கானதல்ல: ராகுல்காந்தி

கன்னியாகுமரி: National flag not for individual : நாட்டின் தேசியக் கொடு தனி நபருக்கானதல்ல என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்தார்.

கன்னியாக்குமரி காந்தி மண்டபத்தில் (Kanyakumari Gandhi Mandapam) புதன்கிழமை தொடங்கிய பாத யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியிடன் தேசியக் கொடியை கொடுத்து, தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடற்கரை சாலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: நாட்டின் அடையாளமாக தேசியக் கொடி விளங்குகிறது. இது தனி நபருக்கானதல்ல. இன்று இந்தக் கொடி தாக்குதலுக்கும், அச்சத்திற்கும் உள்ளாகி உள்ளது.

நாட்டை மதம், மொழி மூலம் பிளவுப் படுத்த பாஜக முயல்கிறது (BJP is trying to divide the country on the basis of religion and language). இந்த நாடு எப்போதும் ஒற்றுமையாகத்தான் இருக்கும். வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடி, வேலை இல்லா திண்டாட்டம், ஆகியவற்றால் நாடு பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. பெரும் தொழிலதிபர்கள் நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்துள்ளனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள் எல்லாம் பெரும் தொழிலதிபர்களின் பணத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள். விலைவாசி உயர்வு மக்களை அதிக அளவில் பாதித்துள்ளது.

எனவே இந்தியர்களை ஒற்றுமை படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது (There is a need to unite Indians). அதற்காகத்தான் இந்த பாத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் கோரிக்கைகளை உணர்வுகளை கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என்றார். நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங், எம்.பிக்கள் ப.சிதம்பரம், காங்கிரஸ் கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன் கார்கே, விஜய் வசந்த், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.