Multi-state cooperative organic society: பன்-மாநில இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: Cabinet approves setting up of a national level multi-state cooperative organic society. தேசிய அளவிலான பன்-மாநில இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்எஸ்சிஎஸ்) 2002 விதியின் கீழ் தேசிய அளவிலான பன்-மாநில இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவுக்கு ஏதுவாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், உணவுப்பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான அமைச்சகத்தின் கொள்கைகள், திட்டங்கள் மூலம் ஆதரவளிக்கும் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு வேளாண் தொழில்நிறுவனங்கள் வெற்றிபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எம்எஸ்இஎஸ் 2002 விதியின் கீழ் தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இயற்கை வேளாண் பொருட்கள் மீது மக்களின் நம்பிக்கையைப் பெற ஏதுவாக, கூட்டுறவு சங்கங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் விதமாகவும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய அளவிலான கூட்டுறவு தொடக்க சங்கத்தில், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான கூட்டுறவு சங்கங்கள், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் (எஃப்பிஓ) ஆகியவை உறுப்பினர்களாக இணைய முடியும். இந்த அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், கூட்டுறவுசங்க விதிகளின்படி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த கூட்டுறவு சங்கம், இயற்கை வேளாண் பொருட்களை அங்கீகரிப்பதுடன் அவற்றுக்கு அங்கக சான்றிதழையும் வழங்கும் பணியையும் மேற்கொள்ளும். அதே போல், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான தேவை மற்றும் நுகர்வுக்கு இடையேயான இடைவெளியை சமன் செய்யவும் உதவும்.

அதேபோல், தேசிய அளவிலான பல்வேறு மாநில கூட்டுறவு விதைச் சங்கம் மற்றும் கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தரமான விதைகளின் விநியோகம், சந்தைப் படுத்துதல், சேமித்தல், கட்டுதல், பெயரிடுதல், செயல்படுத்துதல், கொள்முதல் மற்றும் உற்பத்திக்கான முதன்மை அமைப்பாக இச்சங்கம் விளங்கும். உள்நாட்டு இயற்கை விதைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான நிறுவனமாக இது இருக்கும். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தேசிய விதை கழகம் உள்ளிட்டவை ஆதரவுடன் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் விதைச் சங்கம் செயல்படும்.

விதை மாற்று விகிதம் மற்றும் மாறுபாட்ட மாற்று விகிதம் ஆகியவற்றை இது ஊக்குவிப்பதுடன், மகசூல் இடைவெளிகளைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும்.

கூட்டுறவுத் துறையின் ஏற்றுமதியை மேம்படுத்த இச்சங்கம் முக்கிய காரணியாக திகழும். சர்வதேச சந்தையில் இந்திய கூட்டுறவு துறை பொருட்களை தடையின்றி ஏற்றுமதி செய்ய ஏற்றுமதி சங்கம் உதவிடும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் பல்வேறு ஏற்றுமதி தொடர்புடைய திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு ஏற்றுமதி சங்கம் உதவிகரமாக இருக்கும்.