Mangaluru cooker blast case : மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு: மதுரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

மதுரை : Mangalore cooker blast case: NIA officials probe in Madurai : கர்நாடக மாநிலம் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு மதுரை டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் (Madurai Town Hall Road, Katrapalayam and other areas) உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கர்நாடக மாநிலம் தென் கன்னட மாவட்டம் மங்களூரில் அண்மையில் ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர் (The passenger and driver of the auto were injured). இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்தது.

மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷாரீக் (24) (Mohammad Shahreek of Tirthahalli, Sivamogga district) என்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விசாரணையை கர்நாடக காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மதுரை டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை (NIA officials are investigating Madurai Town Hall Road, Katrapalayam and other areas) மேற்கொண்டனர்.