Man Carries His Wife on Shoulders : மனைவியைத் தூக்கிக்கொண்டு திருப்பதி மலை ஏறிய கணவர்: காரணத்தைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்

இந்த ஜோடி மிகவும் அன்பாக நடந்துகொள்வதைப் பார்த்து புதுமணத் தம்பதிகள் ஆச்சரியப்படுவார்கள். இந்த தம்பதிக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஜோடி 1998 இல் திருமணம் செய்து கொண்டது மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர், இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

Man Carries His Wife on Shoulders: திருப்பதி திருமாலின் தரிசனம் பெறுவதே சிறப்பு. குறிப்பாக படிக்கட்டுகளில் ஏறி திருப்பதி திருமலையை தரிசனம் செய்வது எல்லாவற்றையும் விட‌ சிறப்பானது. ஆனால் மக்கள் தங்கள் வசதிக்கேற்ப பேருந்து, கார், நடைபாதை போன்ற பல்வேறு வழிகளில் ஏழு மலையானை தரிசனம் செய்ய வருகிறார்கள். ஆனால் இங்கு ஒரே ஒரு கணவன் மட்டும் தன் மனைவியைத் தோளில் சுமந்து கொண்டு திம்மப்பனை தரிசனம் செய்து (Tirumala Hills) சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளார்.

ஆந்திர மாநிலம் (Andhra State) கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையம் மண்டலம் கடியபுங்காவைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சத்யபாபு என்பவர் தனது மனைவியைத் தோளில் சுமந்து கொண்டு மலையேறத் துணிந்தவர். சத்யபாபு, தனது மனைவி லாவண்யாவை தோளில் சுமந்து செல்வதைக் கண்ட மற்ற பக்தர்கள், ஏதோ நேர்த்திக் கடனை அடைப்பதற்காக அதைச் சுமந்ததாக எண்ணினர். புதுமணத் தம்பதிகள் தங்களது காதலை வெளிப்படுத்தவே மனைவி இப்படி முயற்சி செய்கிறார் என்று மற்றவர்கள் நினைத்தனர். ஆனால் இது உண்மை அதுவ‌ல்ல.

மாறாக மனைவியின் சவாலை ஏற்றுக் கொண்டு வெற்றி பெற மனைவியை சுமந்து சென்றுளார் சத்ய பாபு. திருப்பதி திம்மப்பானின் சன்னிதானத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருந்த சத்யபாபுவிடம், தன்னை தூக்கிச் செல்லமுடியுமா? என்று அவரது மனைவி சவால் விட்டுள்ளார் (Wife challenged). இதனையடுத்து சத்ய பாபு தன் மனைவியின் சவாலை ஏற்று, அவரை தூக்கிக்கொண்டு படிகளில் ஏறி கடவுளை தரிசனம் செய்தார்.

இருப்பினும், இந்த ஜோடி மிகவும் அன்பாக நடந்துகொள்வதைப் பார்த்து புதுமணத் தம்பதிகள் ஆச்சரியப்படுவார்கள். இந்த தம்பதிக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகிறது (Married for 24 years). இந்த ஜோடி 1998 இல் திருமணம் செய்து கொண்டது மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர், இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி சத்ய பாபு, லாவண்யாவும், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி ஆகி உள்ளனர்

சத்ய பாபுவின் மருமகனுக்கு நல்ல சாப்ட்வேர் கம்பெனியில் (software company) வேலை கிடைத்ததுள்ளது. இதனையடுத்து குடும்பத்துடன் வந்து பூஜை செய்வதாக வேண்டிக் கொண்டுள்ளனர். இதனால் சத்ய பாபுவின் மருமகன் குருதத் 40 குடும்ப உறுப்பினர்களுடன் வந்து திருப்பதியில் பூஜை செய்தார். அப்போது சத்ய பாபு, லாவண்யாவை சுமந்த‌ இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் மனைவி மீது இவ்வளவு காதலா என்று ஆச்சரியமடைந்து வருகின்றனர்.