பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது மகாராஷ்டிரா

Maharashtra slashes VAT on petrol
பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது மகாராஷ்டிரா

Maharashtra slashes VAT on petrol: பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

இதற்கிடையே, முதல் மாநிலமாக கேரள அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ.2.41-ம், டீசல் மீதான வாட் வரியை ரூ.1.36-ம் குறைப்பதாக அறிவித்தது.

கேரளாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ. 2.48-ம், டீசல் மீதான வரியை ரூ. 1.16-ம் குறைத்து அறிவித்தது.

இந்நிலையில், கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்துள்ளது.

அதன்படி மகாராஷ்டிர அரசு பெட்ரோல் மீதான வாட் வரியில் 2.08 ரூபாயும், டீசல் மீதான வரியில் 1.44 ரூபாயும் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

Maharashtra slashes VAT on petrol, diesel after Centre cuts fuel rates

இதையும் படிங்க: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி