Maharashtra political crisis: மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் உத்தவ் தாக்கரே

Maharashtra political crisis: Uddhav Thackeray resigned as Chief Minister

Maharashtra political crisis: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இரு தரப்பினரும் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் இறுதி முடிவு ரிட் மனுவின் முடிவைப் பொறுத்தே அமையும் என்றும், இது தொடர்பான வேறு மனுக்கள் ஏதேனும் இருந்தால், ஜூலை 11-ஆம் தேதி விசாரிக்கப்படும் நீதிமன்றம் கூறி இருந்த‌து. இந்த நிலையில் ”நான் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். சிவசேனை தொண்டர்கள் சிந்தப்படும் ரத்தத்தில் நான் கையை நனைக்க விரும்பவில்லை”என்று உத்தவ் தாக்கரே முகநூலின் நேரலையில் புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.

ஏறக்குறைய சிவ‌சேனா 40 எம்எல்ஏக்களின் (55ல் 40) ஆதரவு தனக்கு உள்ளதாக‌ ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார், இதனால் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி அரசை சரிவின் விளிம்பிற்கு தள்ளியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் உணர்திறன் மற்றும் பண்பாடு மிக்க முதல்வரை இழந்துள்ளது என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறினார்.

உத்தவ் தாக்கரேவின் ராஜிநாமா குறித்து கருத்து தெரிவித்த ராவத், மகாராஷ்டிரா முதல்வர் மிகவும் அழகாக பதவி விலகினார் என்று கூறினார். உணர்வு மிக்க, பண்பட்ட முதல்வரை இழந்துவிட்டோம். மோசடி செய்பவர்கள் மகிழ்ச்சியான முடிவை சந்திப்பதில்லை என்று வரலாறு சொல்கிறது. இது சிவசேனாவின் மாபெரும் வெற்றியின் ஆரம்பம் என்று ராவத் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

Maharashtra political crisis: Uddhav Thackeray resigned as Chief Minister