Launching of Special Portal:உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க சிறப்பு இணையதளம்

புதுடெல்லி: Launching of Special Portal for Battle Casualties Welfare Fund. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நலநிதிக்கான சிறப்பு இணையதளம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

ராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த அல்லது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதற்காக அக்டோபர் 14, 2022 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘மா பாரதி கே சபூத்’ என்ற இணையதளத்தை தொடங்கிவைத்தார்.

இதன் மூலம் இந்திய குடிமக்கள், பெரு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் முதன்மையான அமைப்புகள் நேரடியாக ‘மா பாரதி கே சபூத்’ இணையதளம் மூலம் காயமடைந்த அல்லது உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிதியுதவி அளிக்க முடியும்.

Account Name: Armed Forces Battle Casualties Welfare Fund (AFBCWF)
Account No.: 90552010165915
Bank Name: Canara Bank Ltd. DoD, South Block
IFSC Code: CNRB0019055
இணைய தளம் : www.maabharatikesapoot.mod.gov.in

நன்கொடை அளிப்பது தொடர்பாக முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் வங்கிகளுக்கு ராணுவ தலைமையகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இத்தகவலை மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் எழுத்துப்பூர்வமாக நரன்பாய் ஜெ.ரத்வா, ராஜ்மணி பட்டேல் ஆகியோருக்கு தெரிவித்தார்.