Kolkata ED Raid : சோதனையில் பணக் குவியலை அமலாக்கத்துறை கண்டுபிடிப்பு

கொல்கத்தா: Kolkata ED Raid : மொபைல் கேமிங் அப்ளிகேஷனை பயன்படுத்தி மோசடி செய்த வழக்கை விசாரித்த அமலாக்க இயக்குனரக அதிகாரிகள், தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து ஏராளமான பணத்தை சனிக்கிழமை கைப்பற்றினர்.

கொல்கத்தா கார்டன் ரீச் (Kolkata Garden Reach) பகுதியில் உள்ள தொழிலதிபர் அமீர் கான் நிசார் அகமது கானின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மொத்தம் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சனிக்கிழமை காலை தொடங்கிய அமலாக்க இயக்குனரகத்தின் சோதனை ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. தற்போது அமீர் வீட்டில் இருந்து 17 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அமீர் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அமீர் கான் வீட்டில் இருந்து பணம் மட்டுமின்றி, நோட்டு எண்ணும் இயந்திரங்களையும் (Note counting machines) அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 5 பெரிய டிரங்குகளில் 17 கோடிக்கும் அதிகமான பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த பெரும் தொகையில் 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான அனைத்து ரூபாய் நோட்டுகளும் இருப்பது தெரிய வந்தது.

E-Nuggets என்ற மொபைல் கேமிங் செயலியின் பயனர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட அமீர்கான் உட்பட பலர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி, கான் உட்பட பலர் மீது பெடரல் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 6 இடங்களில் மொபைல் கேமிங் அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்த வழக்கை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரித்து வருகிறது. தற்போது இது தொடர்பான விசாரணை தொடர்கிறது.

அமீர் கான், S/o நாசர் அகமது கான், பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட e-Nuggets என்ற மொபைல் கேமிங் செயலியை அறிமுகப்படுத்தினர். ஆரம்ப காலத்தில், பயனர்களுக்கு அதிக அளவில் கமிஷன் வழங்கப்பட்டது மற்றும் அவர்கள் செலுத்தி, இருப்பில் உள்ள தொகையை சிரமமின்றி திரும்பப் பெறலாம் என்று கூறப்பட்டது. பயனர்களுக்கு அதிக அளவில் கமிஷன் கொடுத்ததால், அவர்கள் பணத்தின் மீதுள்ள ஆசையால் தொடர்ந்து அதிக தொகையை முதலீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அதிக நிதி சேர்ந்ததால், பயனர்களை அமீர்கான் ஏமாற்றியதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தொடர்ந்து வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் அவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.