Cm Pinarayi Vijayan Meets Pm:பிரதமர் மோடியுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்திப்பு

டெல்லி: கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசுக்கும் (Cm Pinarayi Vijayan Meets Pm) ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையில் பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இதனையடுத்து கேரள அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தி முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவு செய்தார். இது பற்றி பிரதமர் அலுவலகத்திற்கு கேரள முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகுறது. அதில் காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்றும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை அதற்காகவும் அவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. கேரளாவில் பா.ஜ.க.வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிரச்சனை நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடியை முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.