3 soldiers killed in avalanche : பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலி

ஜ‌ம்மு மற்றும் காஷ்மீர், (Jammu-kashmir, 3 soldiers killed in avalanche) குப்வாரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் புதைந்து மூன்று ராணுவ வீரர்கள் இறந்ததாக தெரிவித்தனர். குப்வாரா காவல்துறையின் கூற்றுப்படி, மாவட்டத்தின் மச்சில் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் ராணுவத்தின் 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது உயிரிழந்தனர்.

தேடுதல் நடவடிக்கையின் பின்னர் அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் சவுவிக் ஹஸ்ரா, முகேஷ்குமார், மனோஷ் லக்ஷ்மண் ஆகியோர் இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் சடலங்கள் ட்ரக்முல்லா ராணுவ மருத்துவமனைக்கு (Truck Mulla Army Hospital) கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், 56 RR இன் 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கியபோது மச்சில் பகுதியில் பணியின் போது வீரமரணம் அடைந்தனர். அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன,” என்று குப்வாரா போலீசார் தெரிவித்தனர். முன்னதாக நவம்பர் 15 அன்று, புதிய பனிப்பொழிவுக்குப் பிறகு, குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாங்கஸ் நவ்காம் சாலையில், எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) பனி அகற்றும் இயக்கத்தைத் தொடங்கியது.

பனிப்பொழிவை தொடர்ச்சியான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் (Electricity and water supply), பொதுப் பயன்பாடுகள், ரேஷன், மருந்துகள் மற்றும் இதர தேவைகளை 24 மணி நேரமும் அணுகக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த செயல்திட்டங்கள் அமைக்கப்படுவதைக் காண ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அண்மைக்காலமாக பனிப்பொழிவு காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.