Indo-French air exercise: இந்திய-பிரெஞ்சு கூட்டு விமானப் பயிற்சி நிறைவு

ஜோத்பூர்: 7th edition of the Indo-French air exercise concludes in Jodhpur. ஜோத்பூரில் உள்ள விமானப்படைத்தளத்தில் நடைபெற்று வந்த இந்திய விமானப் படை (ஐஏஎப்) மற்றும் பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை (எப்ஏஎஸ்எப்) ஆகிவற்றின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி ‘கருடா-VII ‘ இன்று நிறைவடைந்தது.

பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படையின் ரபேல் போர் விமானம் மற்றும் ஏ-330 பல்திறன் டேங்கர் போக்குவரத்து அம்சங்களுடன் கூடிய விமானம் போன்றவைகள் இந்தக்கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது, இந்திய விமானப்படை சார்பாக சுகோய்-30, ரபேல், தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் கலந்து கொண்டன.

ஜாகுவார் போர் விமானம், இராணுவ மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் புதிதாக விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள ‘பிரசந்தா’ போன்றவைகள் இந்திய விமானப்படையின் பங்களிப்புகள் ஆகும்.

கருடா-VII பயிற்சியானது, இருநாட்டு விமானப் படைகளுக்கும் தொழில்முறையிலான தொடர்பை ஏற்படுத்தவும், செயல்பாட்டுத்திறன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது. இந்தப் பயிற்சியின் விளைவாக இருநாட்டு விமானப்படை வீரர்களும் வான்வெளிப்போர் நடவடிக்கைகளின் நுட்பங்களை ஆராய்ந்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் இந்த பயிற்சியானது இரு நாட்டு விமானப்படை வீரர்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தியது.