Promotional display vehicle : விமானப்படையில் சேர தூண்டும் விளம்பர கண்காட்சி வாகனம்

கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்ட‌ விமானப்படையில் சேர தூண்டும் விளம்பர கண்காட்சி வாகனம் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று, மாணவர்கள், இளைஞர்க‌ளுக்கு காட்சி படுத்த உள்ளது.

பெங்களூரு : Air Force Promotional display vehicle : த‌லைமையகப் பயிற்சிக் கட்டளை, இந்திய விமானப்படையில் அதிகாரியாக நாட்டின் வலிமை மிக்க விமானப் படையில் சேர இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக வேண்டும் என்ற நோக்கத்தில் விளம்பர கண்காட்சி வாகனம் (IPEV) தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், இளைஞர்களை தூண்டும் இயக்கத்தின் மூலம் அதன் முதல் மாணவர் தொடர்புத் திட்டத்தைத் தொடங்கியது.

ஆக. 3-ஆம் தேதிய‌ன்று இந்திய விமானப்படையின் பயிற்சிக் கட்டளையின் மூத்த அதிகாரி-இன்சார்ஜ் அட்மினிஸ்ட்ரேஷன் ஏர் வைஸ் மார்ஷல் பி.கே.கோஷ் (Air Vice Marshal PK Ghosh) கொடியேற்றினார்.

இந்திய விமானப்படையில் (Indian Air Force) உள்ள தொழில் வாய்ப்புகளில் மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் இந்திய விமானப்படையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதற்கு இந்த உந்துதல் எதிர்நோக்குகிறது.

ஐபிஇவி என்பது ஃப்ளையிங் சிமுலேட்டர் மற்றும் பிற நவீன கேஜெட்களுடன் (With flying simulator and other modern gadgets) கூடிய வால்வோ பஸ் ஆகும். இந்த இயக்கத்தின் போது, ஐபிஇவி வாகனக் குழு சேலம், கோயம்புத்தூர், பெரம்பலூர், சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு காட்சி படுத்திவிட்டு,செப். 10 ஆம் தேதி மீண்டும் பெங்களூரில் உள்ள விமானப் படை தளத்திற்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை:

இந்திய விமானப் படை (Indian Air Force) இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமாகும். இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.

இந்திய வான்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதியன்று இந்திய வான்படை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.

இந்திய வான்படை சுமார் 1,70,000 வீரர்களைக் கொண்டுள்ளது. சுமார் 1,130 போர் விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான் படையாகத் திகழ்கிறது (fourth largest Air Force in the world). அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களே முதல் பெரும் படைத்தலைவர் ஆவார்.

இந்திய வான்படையின் குறிக்கோள் (mission) எனப்படுவது ஆயுதப்படைச் சட்டம் 1947, இந்திய அரசியலமைப்பு மற்றும் வான்படைச் சட்டம் 1950 ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இதன் தலையாய கடமையாகும்.

பிரிட்டிஷ் ராயல் (British Royal) விமானப்படையின் இந்திய பிரிவாக இந்திய விமானப்படை 8 அக்டோபர் 1932 அன்று தொடங்கப்பட்டது. ஏப்ரல் 1933 ஆண்டில் நான்கு வெஸ்ட்லாண்ட் வாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் இந்திய விமானப்படை தனது முதல் படையணிப்பிரிவை தொடங்கியது.இந்தப் பிரிவு பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி சீசல் பௌசீர் வழிகாட்டுதலில் இயங்கியது.