IFSCA executes MoU with RBI:சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்துடன் ரிசர்வ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி: IFSCA executes MoU with the Reserve Bank of India (RBI). சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்துடன் ரிசர்வ் வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளன.

சர்வதேச நிதி சேவை மைய ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் தங்களது வரம்பிற்கு உட்பட்ட துறைகளில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளன. தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.

அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு பொறுப்பை சர்வதேச நிதி சேவை மையம் வகிக்கிறது. இதேபோன்ற கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் மத்திய வங்கியும், இந்திய நிதி ஆணையமுமான ரிசர்வ் வங்கியும் ஈடுபடுகிறது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையே ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, இதன் மூலம் அந்தந்த நிதி சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு, வர்த்தக வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உகந்த சூழல்களையும் வளர்க்கிறது.