No change in the rule Children in train: ரயில்களில் குழந்தைகளுக்கு இலவசம்: ரயில்வே துறை மறுப்பு

புதுடெல்லி: No change in the rule related to booking of tickets for Children travelling in train: குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவில் விதிகள் மாற்றப்பட்டுள்ளது குறித்து வெளியான தகவலுக்கு ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரயில்களில் கட்டணமின்றி செல்லலாம் எனவும், ஆனால், அவர்களுக்கு தனியாக படுக்கை வசதியோ அல்லது இருக்கையோ ஒதுக்க முடியாது.

ஒருவேளை தங்களின் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதி தேவைப்பட்டால், வயதுவந்தோருக்கான கட்டணத்தை செலுத்தி பெறலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை. பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக்கொள்ளலாம்.

தனி இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.