Heavy Rainfall : தேசிய அளவில் சில மாநிலங்களில் சனிக்கிழமை வரை கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Heavy Rainfall alert in some states till Saturday : வடகிழக்கு பருவமழை தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

திங்கள்கிழமை இரவு முதல் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் (In some states including Tamil Nadu, Karnataka) தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழையால் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்ட‌து. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன‌.

வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அடுத்த நான்கு நாட்களில் பதினாறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. “சென்னை நுங்கம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை 80.4 மி.மீ., மழை பெய்துள்ளது, இது 72 ஆண்டுகளில் நவம்பர் 1 ஆம் தேதி பெய்த மூன்றாவது அதிகபட்ச மழையாகும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1 முதல் 5 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே (Tamil Nadu, Puducherry, Karaikal, Kerala and Mahe) ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் ஏனாம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 4-6 தேதிகளில் மேற்கு இமயமலைப் பகுதியில் லேசான,மிதமான மழை, பனிப்பொழிவு (Light, moderate rain, snowfall in Western Himalayas) மற்றும் நவம்பர் 05 மற்றும் 06 தேதிகளில் பஞ்சாபில் பலத்த‌ மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் மிக கனமழை மற்றும் கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் ஏனாம் மற்றும் ராயலசீமாவில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.