Green Railway Station Certification: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு பசுமை ரயில் நிலையத்திற்கான சான்றிதழ்

விசாகப்பட்டினம்: Visakhapatnam railway station receives ‘Green Railway Station Certification’. விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அதிகப் புள்ளிகளுடன் பசுமை ரயில் நிலையத்திற்கானசான்றிதழைப் பெற்றுள்ளது.

கிழக்கு கடற்கரை ரயில் நிலையங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் ரயில் நிலையம் அதிகப் புள்ளிகளுடன் பசுமை ரயில் நிலையத்திற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைக்கும் வகையில் மேற்கொண்ட பசுமை நடவடிக்கைகள் காரணமாக, இந்திய பசுமைக் கட்டமைப்புக் கவுன்சில் (ஐஜிபிசி) இந்த சான்றிதழை வழங்கியுள்ளது. விசாகப்பட்டினத்தில் 24.01.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஜிபிசி-யின் விசாகப்பட்டினக் கிளையில் தலைவர் டாக்டர் எஸ் விஜயகுமாரிடம் இருந்து விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தின் டிஆர்எம் வால்டியரான திரு அனுப் சத்பதி பெற்றுக் கொண்டார்.

நாட்டில் உள்ள ஒருசில ரயில் நிலையங்கள் மட்டுமே இந்த பசுமை ரயில் நிலைய சான்றிதழைப் பெற்றுள்ளன. அவற்றில் விசாகப்பட்டினம் ரயில் நிலையமும் ஒன்று. ஆறு சுற்றுச்சூழல் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் விசாகப்பட்டினம் ரயில் நிலையம் நூற்றுக்கு 82 புள்ளிகளுடன் இந்த சான்றிதழை பெற்றுள்ளது.

ஐஜிபிசி ஆதரவுடன் இந்திய ரயில்வேயின் சுற்றுச்சூழல் இயக்குநரகம், பசுமை ரயில் நிலையத்திற்கான தர நடைமுறையை உருவாக்கியிருக்கிறது. நீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, எரிசக்தி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த தர நடைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.