Fertiliser subsidy: உர விலை உயர்வில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க கூடுதல் மானியம்

Fertiliser subsidy
உர விலை உயர்வில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க கூடுதல் மானியம்

Fertiliser subsidy: பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரி குறைப்பை அறிவித்துள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியம் 1கோடியே 10 லட்சம் கோடியாக அதிகரிக்கப் படுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய பட்ஜெட்டில் உர மானியம் ரூ.1.05 லட்சம் கோடி கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றில் தொற்றுநோயிலிருந்து உலகம் மீண்டு வரும் நேரத்தில், உக்ரைன் ரஷியா மோதல், விநியோகச் சங்கிலி சிக்கல் மற்றும்
பொருட்கள் பற்றாக்குறையை கொண்டு வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இது பல நாடுகளில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவாலான சர்வதேச சூழ்நிலை இருந்த போதிலும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை இந்தியாவில் இல்லை என்பதை
மத்திய அரசு உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைக்கப்படுவதையும் உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்று மத்திய நிதி மந்திரி குறிப்பிட்டுள்ளார்.

Govt. giving additional fertilizer subsidy of ₹1.10 lakh crore this fiscal: FM

இதையும் படிங்க: Hair oil for hair growth: முடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர டிப்ஸ்..!