Woman Battling For Life : பெண் ஒருவர் 5 காமுகர்களால் 2 நாட்கள் தொடர்ந்து கூட்டு பலாத்காரம்

Ghaziabad : வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், இது தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேசம்: Woman Battling For Life: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 பேர் தொடர்ந்து 2 நாட்கள் கும்பல் பலாத்காரம் செய்து கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் டெல்லி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், அந்த நபர்கள் அவரது கை, கால்களை சாக்கு மூட்டையில் கட்டி சாலையில் வீசியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு காஜியாபாத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பேருந்திற்காக காத்திருந்த போது, ​​அதே இடத்தில் வந்த காமுகர்கள் 5 பேர், ஸ்கார்பியோ காரில் அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்று, கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர் (They committed gang rape).

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த காசியாபாத் நகர எஸ்பி நிபுன் அகர்வால் (Ghaziabad City SP Nipun Aggarwal), கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி ஆசிரம சாலை அருகே பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக‌ நந்தகிராம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டெல்லியில் வசிக்கும் அவர், நந்தகிராமில் உள்ள தனது சகோதரரின் வீட்டிற்கு வந்திருந்தார். அண்ணன் அவளை இறக்கி விட்டதையடுத்து, அந்த பெண் இருந்த இடத்திற்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இதுவரை, இந்த வழக்கு தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்து, எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

டெல்லி மகிளா ஆயோக் தலைவர் ஸ்வாதி மாலிவால் (Delhi Mahila Aayog Chairperson Swati Maliwal) ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது தொடர்பாக காசியாபாத் காவல்துறைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெண்ணின் அந்தரங்கத்தில் காமுகர்கள் கம்பியை செருகியுள்ளனர். ரோட்டில் கிடந்த பெண்ணை பார்த்த போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணின் அந்தரங்க பகுதியில் குரூரமாக கம்பி செருகப்பட்டதாக தெரிவித்தனர்.