First National Coal Conclave & Exhibition: 2022வரும் 16, 17 தேதிகளில் முதல் தேசிய நிலக்கரி மாநாடு

புதுடெல்லி: First National Coal Conclave & Exhibition in Delhi on 16-17 October, 2022. டெல்லியில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் முதல் தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது.

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசியக் குழு, “தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய நிலக்கரித்துறை” என்ற கருப்பொருளில் இரண்டு நாட்கள் தேசிய மாநாட்டை, புதுடெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டில், மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் நிலக்கரி, சுரங்கம் மற்றும் ரயில்வேதுறை இணையமைச்சர் ராவ்சாஹேப் பாட்டீல் தன்வே ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

இந்த இரண்டுநாள் மாநாடு, கொள்கை இயற்றுவோர், பொது மற்றும் தனியார் சுரங்க நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் கலந்துரையாடவும், தற்சார்பு இந்தியா திட்டத்துடன் இந்திய நிலக்கரி துறையை இணைப்பதற்கு தேவையான திட்டங்களை வகுக்கவும் சரியான தளத்தை வழங்கும். மின்சார தயாரிப்பில் எரிபொருளில் தன்னிறைவு பெறுதல், தற்சார்பு இந்தியாவில் நிலக்கரிக்கான எஃகு தயாரிப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை மாநாட்டின் மையப்பொருளாக இருக்கும்.

நிலக்கரி, சுரங்கம், மின்சாரம், எஃகு, பேரிடர் மேலாண்மை, நிதி ஆயோக் ஆகிய அமைச்சகங்களை சேர்ந்த உயரதிகாரிகள், நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் சுரங்க பொறியில் துறையை சேர்ந்த 150-க்கும் மாணவர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கண்காட்சியானது இந்திய நிலக்கரி துறையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும். மேலும், சமீபத்திய தொழில்நுட்பங்கள், நிலையான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பங்கள், சுரங்க பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகள் மற்றும் இந்திய நிலக்கரி துறையில் பயன்படுத்தப்படும் தகவல் தொழில் நுட்ப கருவிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படும்.