Drunk husband : மது போதையில் மனைவியின் அந்தரங்கத்தில் பசை போட்ட கணவர்

குடிபோதையில்: இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் ஷியோபுராவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்திற்குட்பட்ட‌ பகுதியில் இது நடந்துள்ளது. இந்த செயலை அந்தப் பெண்ணின் கணவர் செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசம்: Drunk husband put glue on his wife’s private part : மது போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால், அந்த பாதிப்பிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம். இந்த அடிமைத்தனத்தால் யாருக்கும் எந்த‌ தொந்தரவும் இல்லை என்றால், யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், போதையில் உலக அறிவு இல்லாதது போல் நடந்து கொண்டு, செய்யக்கூடாத செயலைச் செய்தால், சிறைக் செல்வதுதான் தீர்வாகும். இங்கு போதைக்கு அடிமையான ஒருவர், ஒரு பாவச் செயலைச் செய்து, போலீசாரின் விருந்தினராக ஆகியுள்ளார். அவர் தனது சொந்த மனைவியின் அந்தரங்க உறுப்புகளில் ஃபெவி க்விக் பசை போட்டு மிருகத்தனமான நடந்து கொண்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபுராவில் (Madhya Pradesh, Sheopura) உள்ள கோட்வாலி காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த மாதிரி செயலைச் செய்த பாவி கணவர் சென். சென் பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். விசாரணையில் அவர் மது போதையில் வேறு பல வகையான போதைப்பொருட்களை உட்கொண்டது தெரியவந்தது.

சென்னின் இந்த போதைப் பழக்கத்தால் (Drug addiction) அவரது மனைவி மிகவும் பாதிக்கப்பட்டதால். சென் மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தததாம்.

அண்மையில், சென்னின் மதுப் பழக்கம் எல்லை மீறியது. மேலும் மது அருந்த மனைவியிடம் பணம் தருமாறு கேட்டுள்ளார். மனைவி பணம் தராததால், அவரைக் கொடுமைப்படுத்தியுள்ளார். இறுதியில் மனைவியின் கை, கால்களை கயிற்றால் இறுக்கமாக கட்டிப் போட்டுள்ளார். இதையடுத்து, மனைவியின் அந்தரங்க உறுப்பில் ஃபெவி க்விக் பசை (Fevi Quick glue on the private part) போட்டுள்ளார். இந்த சம்பவத்தால் வலி தாங்க முடியாமல் அவரது மனைவி அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் பெண்ணுக்கு அவரது கணவர் செய்ததைக் கண்டு அதிர்ந்தனர். பசை போடப்பட்டதை அறிந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாவி கணவர் சென்னின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு (inhuman act) அக்கம் பக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட சென்னைக் கைது செய்த போலீசார், போதை குறைந்த பிறகு அவரை நன்றாகத் கவனித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் செய்தியாக மாறியதால், சென்னின் செயலுக்கு நெட்டிசன்கள் கூட கடும் கோபத்தில் உள்ளனர். மொத்தத்தில் குடிபோதையில் செய்யக்கூடாத செயலை சென் செய்துள்ளார். அவரது செயலுக்கு பரவலாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.