Draupadi Murmu : நாட்டின் 15-குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவி ஏற்பு

அண்மையில் நடைபெற்ற‌ குடியரசு தலைவர் தேர்தலில் 64 சதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தில்லி : Draupadi Murmu today take oath of the 15th president of the nation : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ப‌ழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த 64 வயது திரௌபதி முர்மு இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக இன்று (ஜூலை 25) பதவியேற்க உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் (Ram Nath Govind) பதவிக் காலம் நிறைவு பெற்றதடையடுத்து அண்மையில், புதிய குடியரசு தலைவர் தேர்தலில் 64 சதம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இன்று புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்க உள்ளார். அண்மையில் குடியரசு தலைவர் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, நாட்டின் 15-வது குடியரசு தலைவராக அவர் இன்று பதவியேற்கிறார்.

நாடாளுமன்ற‌ மைய மண்டபத்தில் காலை 10:15 மணிக்கு நடக்கும் விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா (Supreme Court Chief Justice N.V.Ramana), அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்துகிறார்.

முன்பாக, குடியரசு தலைவர் மாளிகைக்குச் (President House) செல்லும் முர்முவை, பதவியை நிறைவு செய்து வெளியேறும் ராம்நாத் கோவிந்த் வரவேற்று, முறைப்படி வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

நாடாளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், ஆளுந‌ர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், வெளிநாட்டு துாதர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர். நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதும், குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லும் முர்முவுக்கு முப்படைகளின் சார்பில் வரவேற்பு அணிவகுப்பு நடைபெற்று கௌரவம் அளிக்கப்படும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பழங்குடி சமுதாயத்தில் (tribal society) பிறந்த ஒருவர் குடியரசு தலைவராக‌ பதவியேற்பது இதுவே முதல் முறை. மேலும் மிகவும் இளம் வயதில் குடியரசு தலைவராக பதவியேற்பவர் என்ற‌ பெருமையையும் இவர் பெறுகிறார். இரண்டாவது பெண் குடியரசு தலைவராகவும் அவர் திகழ்கிறார்.

பதவியேற்பு விழாவில், திரவுபதி முர்முவின் சகோதரர் தரினிசென் தூடு, அவரது மனைவி சுக்ரி தூடு, முர்முவின் மகள் இதிஸ்ரீ, அவரது கணவர் கணேஷ் ஹெம்பிராம் உள்ளிட்ட சில‌ உறவினர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர் (Only a few relatives will participate). பழங்குடியின சமுதாயத்தில் சந்தாலி பிரிவைச் சேர்ந்த அவர், அவர்களின் பாரம்பரிய சேலையான சந்தாலி சேலையை அணிந்து பதவி ஏற்பார் எனக் தெரிகிறது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஒடிசா பழங்குடியின மக்கள் தயாரித்த இனிப்பு வகைகள் பரிமாறப்படும் என கூறப்படுகிறது.