Ministry of Agriculture : பழங்கால மற்றும் மறக்கப்பட்ட தானியங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேளாண் அமைச்சகம் பல்வேறு முயற்சி

தில்லி: Declare 2023 as International Year of Small Grains : 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறக்கப்பட்ட பழைமையான தானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, பல்வேறு முன்னெடுப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மைகவ் (MyGoV) இயங்குதளமானது பல்வேறு போட்டிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான ஊடகமாக மாறியுள்ளது. மைகவ் மீதான ஈடுபாடு அதை மக்கள் இயக்கமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும். பல போட்டிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, சில நடந்து வருகின்றன, மேலும் பல எதிர்காலத்தில் மைக (MyGoV) தளத்தில் தொடங்கப்படும், நாட்டின் கற்பனை மற்றும் படைப்பாற்றல் உணர்வைப் பிரதிபலிக்கும். போட்டிகள் பற்றிய விவரங்கள் மைகவ் இணையதளத்தில் உள்ளன.

இந்தியாவின் செல்வம், ஆரோக்கியத்திற்கான சிறுதானியங்கள் (Small grains) என்ற கருப்பொருளுடன் காமிக் கதையை வடிவமைப்பதற்கான போட்டி நிகழாண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது, மேலும் இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிறுதானியங்களின் ஆரோக்கிய நன்மைகளை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டது. போட்டி நவம்பர் 5 ஆம் தேதி நிறைவடைகிறது, இதுவரை ஊக்கமளிக்கும் வகையில் பதிவுகள் வரப்பெற்றுள்ளன.

சிறுதானிய ஸ்டார்ட்அப் புத்தாக்க சவால் (Small-Scale Startup Innovation Challenge) செப்டம்பர் 10 அன்று தொடங்கப்பட்டது. இந்த முயற்சியானது சிறுதானிய சுற்றுச்சூழல் அமைப்பில் தற்போதுள்ள பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப/வணிக தீர்வுகளை வழங்க இளைஞர்களை ஊக்குவிக்கிறது. இந்தப் போட்டி நிகழ்ச்சி 2023 ஜனவரி 31, வரை நடைபெறும்.

வலுவான சிறுதானியங்கள் வினாடி வினா போட்டி (Small grains quiz competition) அண்மையில் தொடங்கப்பட்டது, இது சிறுதானியங்களின் நன்மைகள் அடிப்படையிலான கேள்விகளை கொண்டுள்ளது. சிறுதானியங்களின் மற்றும் அதன் பலன்களை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள். போட்டி அக்டோபர் 20 அன்று முடிவடைகிறது.