Competition to make toys from Waste: கழிவுகளிலிருந்து பொம்மைகள் தயாரிக்கும் போட்டி; மத்திய அரசு அறிமுகம்

புதுடெல்லி: MoHUA to launch ‘Swachh Toycathon’, a unique competition to make toys from ‘Waste’. கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.

பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் 2020 இந்தியாவை உலகளாவிய பொம்மை மையமாக நிறுவும் நோக்கத்துடன் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொம்மைகள் உள்ளிட்ட இந்திய பொம்மைத் தொழிலை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 14 அமைச்சகங்களுடன் இணைந்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தற்போது இதன்பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.

உலகின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பாதி 25 வயதுக்குட்பட்ட வளர்ந்து வரும் இளஞர்களாகும். வலுவான பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் புதுமையான படைப்பாற்றல் ஆகியவற்றால் பொம்மைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

மாறிவரும் நுகர்வு முறைகள் மற்றும் மின் வணிகத்தின் விரைவான வளர்ச்சி ஆகியவற்றால், தனிநபர் கழிவு உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் சீராக அதிகரித்து, நகரங்களில் கழிவு மேலாண்மை என்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சவாலாக உள்ளது. தூய்மை இந்தியாஇயக்கத்தின் இரண்டாம் கட்டம், 2026 ஆம் ஆண்டுக்குள் ‘குப்பை இல்லாத நகரங்கள்’ என்ற பார்வையுடன் பிரதமரால் 2021 அக்டோபர் முதல் தேதியன்று தொடங்கப்பட்டது.

ஒருபுறம் பொம்மைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் திடக்கழிவுகளின் தாக்கத்தால், தூய்மை டாய்கேத்தான் என்பது பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் மற்றும் தூய்மை இந்தியாஇயக்கத்தின் இரண்டாம் கட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகும். இது பொம்மைகளை உருவாக்குதல் அல்லது தயாரிப்பதில் கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான தீர்வுகளை ஆராய முயல்கிறது. உலர் கழிவுகளைப் பயன்படுத்தி பொம்மை வடிவமைப்புகளில் புதுமைகளைக் கொண்டு வர தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு போட்டிகள் நடைபெறும்.

சேவைகள் தினமான செப். 17 முதல், தூய்மை தினமான அக். 2 வரை, தூய்மை அமிர்தப் பெருவிழாவின் கீழ், இந்தப் போட்டி தொடங்கப்படுகிறது.

மைகவ்- இன் இன்னோவேட் இந்தியா போர்ட்டலில் போட்டி நடத்தப்படும். செப்டம்பர் 26 அன்று காலை 10:30 மணிக்கு ஒரு மெய்நிகர் நிகழ்வில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களின் செயலாளரால் இது தொடங்கப்படும். நிகழ்வை bit.ly/3r1OaIE என்ற லிங்கில் நேரடியாகப் பார்க்கலாம்.