Bus fire accident : தனியார் பேருந்து தீ விபத்தில் 11 பேர் பலி

Bus fire : தனியார் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. கண்ணெதிரிலேயே பேருந்து முழுவதும் தீயில் எரிந்தது. பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கினர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா, நாசிக் : Bus fire accident : மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார்படுக்கை வசதி கொண்ட‌ பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 11க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் (Around 5 am on Saturday morning) இந்த தீ விபத்து நடைபெற்றுள்ளது. எதிர் திசையில் இருந்து வந்த லாரி மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த தனியார் பேருந்து ஒன்று புசாட்டில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது.நாசிக் நகரில் உள்ள அவுரங்காபாத் சாலையில் வந்து கொண்டிருந்தப்போது போது பேருந்து லாரி மீது மோதியது. இதனால் தனியார் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. கண்ணெதிரிலேயே பேருந்து முழுவதும் தீயில் எரிந்தது. பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கினர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 38 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

“இறந்த‌வர்களில் பெரும்பாலோர் பேருந்தில் பயணம் செய்தவர்கள். ஸ்லீப்பர் கோச். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று நாசிக் காவல்துறை துணை ஆணையர் அமோல் தம்பே (Nashik Deputy Commissioner of Police Amol Tambe) தெரிவித்தார். தீ விபத்துக்கான சரியான காரணத்தை அறிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றபோது, ​​பேருந்தில் ஒரு பெரிய தீ பந்து சூழ்ந்ததை வீடியோக்கள் காண்பிக்கின்றன. இந்த விபத்து அதிகாலை 5 மணியளவில் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர் (Eyewitnesses say it happened around 5 am). பின்னர் அவர்கள் காவல்துறை மற்றும் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவரை இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே (Chief Minister Eknath Shinde) அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை மகாராஷ்டிர அரசே ஏற்கும் என அம்மாநில அமைச்சர் தாதா பூஸ் தெரிவித்துள்ளார்.