Bjp In Karnataka Single Match Amit Shah: கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தனித்துப் போட்டி: மத்திய அமைச்சர் அமித்ஷா அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க. (Bjp In Karnataka Single Match Amit Shah) நிர்வாகிகள் கூட்டம் பெங்களூருவில் இன்று (டிசம்பர் 31) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைப்பதாக சில பேர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரையில் தனியாக களம் காண்போம். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன்.

மேலும் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அதிகாரத்தைப் பெறுவது ஊழல் செய்வதற்கு ஒரு வழியாகும். ஆனால் பா.ஜ.க.வை பொறுத்தவரை அது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகும். சமீபத்தில் நடைபெற்ற 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பா.ஜ.க.வே வென்றுள்ளது. இதில் காங்கிரஸ் சரிவைதான் சந்தித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.