Bhoomi Pooja of Shri Tanot Mandir Complex : எல்லையில் வீரர்களின் நம்பிக்கை சின்னம்.. ஸ்ரீ டனோட் மந்தீர் கோவிலுக்கு அடிக்கல்

ஜெய்ப்பூர்: laid the foundation stone and performed Bhoomi Pujan of Shri Tanot Mandir Complex: எல்லைப்பாதுகாப்பு படையினரின் நம்பிக்கை சின்னமான ஸ்ரீ டனோட் மந்தீர் கோவில் திட்டத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்தார்.

எல்லைப்பகுதி சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் உள்ள ஜைசல்மாரில் .உள்ள ஸ்ரீ டனோட் மந்தீர் வளாகத் திட்டத்துக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்தார்.

இரண்டாவது நாளாக ராஜஸ்தானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, எல்லைப்பகுதியை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையில், எல்லைப்பகுதியில் அமைதியையும், வளர்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், மேம்படுத்த எல்லைப்பகுதி சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் என்றார். சுமார் ரூ.17.67 கோடி மதிப்பில் ஸ்ரீ டனோட் மந்தீர் வளாகத் திட்டத்திற்கு மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்தார். இந்தத் திட்டத்தின் கீழ் டனோட் மற்றும் ஜைசல்மார் பகுதிகள் வளர்ச்சி அடையும். மேலும் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதால், அவர்கள் இடம்பெயரும் நிலைமையும் மாறும்.

கடந்த 1965 ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில், ஸ்ரீ டனோட் ராய் மாதா கோவில் வளாகத்தில் பாகிஸ்தான் குண்டுகளை வீசியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு குண்டு கூட வெடிக்கவில்லை. இதன் விளைவாக எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் இந்தக் கோவிலை நம்பிக்கையின் சின்னமாக பார்க்கின்றனர்.