Ayodhya sets a Guinness World Record : தீபாவளியை முன்னிட்டு 15.76 லட்சம் தீபங்களை ஏற்றி அயோத்தி கின்னஸ் சாதனை

உத்தரபிரதேசம்: Ayodhya sets a Guinness World Record by lighting 15.76 lakh lamps on the occasion of Diwali : தீபாவளிப் பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக் கரையில் 15.76 லட்சம் அகல்விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை தீபாவளியை முன்னிட்டு சரயு நதிக்கரையில் (On the banks of the Sarayu river on the occasion of Diwali) 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஒளிர்ந்தன. இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் புதிய மைல்கல்லை பதிவு செய்தது. அயோத்தியில் இந்த ஆண்டு தீபாவளி மிகவும் பிரமாண்டமானது, ஏனெனில் இது யோகி ஆதித்யநாத்தின் இரண்டாவது முறையாக முதல் ‘தீபத்ஸவ்’ (விளக்குகள் திருவிழா) ஆகும். லேசர் ஷோக்கள் மற்றும் வாணவேடிக்கைகள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.

20,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 15,76,000 தீபங்களை ஏற்றி வைத்தனர் (Lighting of 15,76,000 lamps). நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் இடங்களிலும் விளக்குகள் வைக்கப்பட்டன. ஐந்து அனிமேஷன் டேபிள்யூக்கள் மற்றும் 11 ராம்லீலா டேபிள்யூக்கள் தீபோத்சவ்வின் போது பல்வேறு மாநிலங்களில் இருந்து நடன வடிவங்களை காட்சிப்படுத்தியது.இதற்கிடையில், கின்னஸ் உலக சாதனைப் பிரதிநிதிகள், முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சான்றிதழை வழங்கினர். இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கின்னஸ் சாதனை சான்றிதழை காட்சிப்படுத்தினர்.

இதில் கலந்து கொண்ட பிரதமா் நரேந்திர மோடி(Prime Minister Narendra Modi), கடவுள் ராமரைப் போல உறுதியாக இருந்தால், நாட்டைப் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றாா். அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லைப் பிரதமா் மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாட்டினாா். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிப் பண்டிகையைப் பிரதமா் மோடி அயோத்தியில் கொண்டாடினாா். அதையடுத்து சரயு நதிக்கரையில் நடைபெற்ற தீபோத்ஸவத்தில் மோடி பங்கேற்றாா். பிரதமர் நரேந்திர மோடி தீப உற்சவத்தை தொடங்கி வைத்ததும் அடுத்தடுத்து 15 லட்சத்து 76 ஆயிரம் விளக்குகள் சரயு நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டன.

19 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்று அகல் விளக்குகளை ஏற்றி உலக சாதனை படைத்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாதனையை கண்டு ரசித்தனர்.இந்த புதிய சாதனையை அடைய அவாத் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் முக்கிய பங்கு வகித்தனர்(Awadh University faculty and students played an important role).