Axis bank: சேமிப்புக் கணக்குகளுக்கு சேவைக் கட்டணம் உயர்வு

axis-bank
சேமிப்புக் கணக்குகளுக்கு சேவைக் கட்டணம் உயர்வு

Axis bank: தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் (Axis Bank) சேமிப்புக் கணக்கு மற்றும் சம்பளக் கணக்குதாரர்களுக்கான சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. புதிய சேவைக் கட்டணங்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஆக்ஸிஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

எல்லா சேமிப்பு கணக்குகளுக்கும் சராசரி மாத இருப்பு தொகை (Average Minimum Balance) உயர்த்தப்பட்டுள்ளது. பிரைம் சேமிப்பு கணக்குகளுக்கு சராசரி மாத இருப்பு தொகை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல லிபர்ட்டி சேமிப்பு கணக்குகளுக்கு சராசரி மாத இருப்பு தொகை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மினிமம் பேலன்ஸ் தொகை இல்லாததற்கு மாதம் குறைந்தபட்சம் 75 ரூபாயும், அதிகபட்சாமாக 600 ரூபாயும் வசூலிக்கப்படும். அதிகபட்ச மாத சேவைக் கட்டணம் செமி அர்பன் பகுதிகளில் அதிகபட்சமாக 300 ரூபாயும், கிராமப்புறங்களில் அதிகபட்சமாக 250 ரூபாயும் வசூலிக்கப்படும்.

இதுவரை, பிரைம் மற்றும் லிபர்டி சேமிப்பு கணக்குகளில் முதல் 5 பரிவர்த்தனைகள் அல்லது 2 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்க இலவசம். ஜூன் 1ஆம் தேதிக்கு பின் முதல் 5 பரிவர்த்தனைகள் அல்லது 1.5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: NEET Exam: நீட் தேர்வை கண்டு மாணவர்கள் அச்சப்படக்கூடாது – அண்ணாமலை பேச்சு