Appointment of new governors:13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

புதுடெல்லி: The President has ordered the appointment of new governors for 13 states including Andhra Pradesh. ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அருணாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கெய்வால்யா த்ரிவிக்ரம் பர்நாயக்-கும், சிக்கிம் மாநில ஆளுநராக லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யாவும், ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக ஷிவ் பிரசாத் ஷுக்லாவும், அஸ்ஸாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியாவும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நஸீரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வ பூஷன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் மாநில ஆளுநராகவும், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த சுஷ்ரி அனுஷியா உய்க்கே மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல. கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநில ஆளுநராக இருந்த பாகு சவ்ஹான் மேகாலயா ஆளுநராகவும், ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் மாநில ஆளுநராகவும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும், அருணாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக இருந்த டாக்டர். பி.டி. மிஸ்ரா லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் திங் கோஷ்யாரி மற்றும் லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் மாத்தூர்-ரின் ராஜினாமாவை ஏற்பதாகவும் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.