National Flag : இந்திய‌ தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிடுவதற்கான விதிகளில் திருத்தம்

முந்தைய விதிகளின்படி தேசியக் கொடியை சூரிய உதயத்திற்கு பிறகும், சூரிய அஸ்தமனம் வரையும் பறக்கவிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது

தில்லி: Indian National Flag at night : இந்திய‌ தேசியக் கொடியை இரவிலும் பறக்கவிடுவதற்கான விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆக. 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசியக் கொடியை பொதுமக்கள் தங்களின் வீடுகளில் ஏற்றுமாறு பிரதமர் நரேந்திரமோடி (Prime Minister Narendra Modi) வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே தேசியக் கொடியை ஏற்றுவது தொடர்பான சில விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் (Union Home Secretary) அஜய் பல்லா, அனைத்து துறையினருக்கும் அனுப்பி இருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்திய தேசியக் கொடியை ஏற்றுவது, பயன்படுத்துதல் ஆகியவை தொடர்பாக கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய தேசியக் கொடு சட்டம் மற்றும் 1977-ஆம் ஆண்டின் தேசியக் கொடி சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தேசியக் கொடியை பொதுமக்கள் வீடுகளில் வெளிப்படையாக காட்சிப்படுத்தவும், அதனை பகல் மட்டுமின்றி இரவிலும் பறக்க விடவும் அனுமதிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடி சட்டத்தில் (Indian National Flag Act) உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய விதிகளின்படி தேசியக் கொடியை சூரிய உதயத்திற்கு பிறகும், சூரிய அஸ்தமனம் வரையும் பறக்கவிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இரவில் ஏற்ற அனுமதி இருக்கவில்லை, கைகளால் நெய்த பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, காதி, பட்டு உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்ட கொடிகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. தற்போது விசைத் தறிகள் மூலம் நெய்யப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், காதி (Cotton, Polyester, Khadi woven by power looms) உள்ளிட்ட துணிகளில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.