6 Pakistani nationals arrest with drugs on boat: இந்திய கடற்பகுதியில் படகு மூலம் போதைப்பொருள் கடத்தல்; 6 பாகிஸ்தானியர்கள் கைது

கட்ச்: Six Pakistani nationals carrying drugs on boat. இந்திய கடற்பகுதியில் படகு மூலம் போதைப்பொருள் கடத்தி வந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியக் கடலோரக் காவல்படை (ஐசிஜி) மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) இணைந்து இன்று நடத்திய கூட்டு நடவடிக்கையில், இந்தியக் கடற்பகுதியில் சுமார் 6 பணியாளர்களுடன் அல் தய்யாசா என்ற பாகிஸ்தான் படகைக் பறிமுதல் செய்தனர். இந்த படகில் ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹீரோயின் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரையும் கைது செய்தனர்.

காந்திநகர் உளவுத்துறை பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரியின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்திய கடலோரக் காவல்படை, நேற்று இரவில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் உள்ள பகுதிகளில் ரோந்துப் பணிக்காக, C-408 மற்றும் C-454 ஆகிய இரண்டு வேகமான இடைமறிப்பு வகைக் கப்பல்களை மூலோபாய ரீதியாக அனுப்பியது. அப்போது இந்த படகை கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய கடலோர காவல்படை ட்விட்டரில், “ATS #Gujarat@IndiaCoastGuard உடனான கூட்டு நடவடிக்கையில், அரபிக் கடலின் இந்திய கடற்பகுதியில் 6 பணியாளர்களுடன் பாகிஸ்தானி படகு அல் தய்யாசா பிடிபட்டது. சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள ஹெராயின் சுமார் 40 கிலோ ஹெராயினுடன் #Jakhau க்கு படகு கொண்டு வரப்படுகிறது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்துள்ளது.

நள்ளிரவில், பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு உள்ளே 5 நாட்டிக்கல மைல் மற்றும் ஜக்காவ்விலிருந்து 40 நாட்டிக்கல மைல் தொலைவில், படகு ஒன்று சரக்குடன் தப்பிக்க முயற்சித்ததைத் தொடர்ந்து, அந்தச் சரக்கு படகை இந்திய கடலோரக் காவல் படை சுற்றி வளைத்தது. அதில் சோதனையிட்டதில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த போதைப்பொருட்கள் சுமார் 40 கிலோ எடையுள்ள ஹெராயின் எனவும், சந்தை மதிப்பு ரூ.200 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கூறுகையில், இந்திய கடல் எல்லைக்குள் 6 மைல் தொலைவில் பாகிஸ்தான் படகு கைப்பற்றப்பட்டது. “இந்திய கடலோரக் காவல் படை இரண்டு விரைவுத் தாக்குதல் படகுகள் குஜராத்தில் உள்ள ஜக்காவ் கடற்கரையிலிருந்து 33 கடல் மைல் தொலைவில் ஒரு பாகிஸ்தான் படகைப் பிடித்தன” என்று தெரிவித்தனர்.
கு

ஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையின் கூட்டு விசாரணைக்காக பாகிஸ்தான் படகு ஜக்காவுக்கு கொண்டு வரப்பட்டு, ஆறு பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டில் இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை கூட்டு நடவடிக்கை இது ஐந்தாவது முறையாகும். மேலும் வலுவான கடலோர பாதுகாப்பு வலையமைப்பிற்கான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை மேலும் இது எடுத்துக்காட்டுகிறது.