57 Railway stations Upgradation: 57 ரயில் நிலையங்கள் மேம்படுத்த திட்டம்

புதுடெல்லி: 57 Railway stations have been identified for redevelopment under ‘Major Upgradation of Railway Stations’. ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 57 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் , ரயில் நிலையங்களில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது குறித்து ரயில்வே அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில், முக்கிய நகரங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையொட்டி அமைந்துள்ள ரயில் நிலையங்களில் மறுமேம்பாட்டுப் பணிகளை பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இதன்படி இந்திய ரயில்வேயின் 43 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுக்கான டெண்டர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 57 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதில் பீகாரின் கயா,. பபுதம் மோதிஹரி மற்றும் முசாபூர் ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இதே போல் மத்தியப் பிரதேசத்தின் ராணி கமலாபட்டி ரயில் நிலையம், குஜராத்தின் காந்திநகர் ரயில் நிலையம், கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யா முனையம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.