Firecracker Factory blast : பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 4 பேர் பலி, 7 பேர் காயம்

MP’s Morena : இடிபாடுகளுக்குள் 6க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் புதையுண்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

போபால்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் (Firecracker Factory blast) 4 பேர் பலி, 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பட்டாசு கிடங்கில் நடந்துள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மொரேனா மாவட்டத்தின் பன்மோர் நகரில் உள்ள ஜெய்த்பூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது, வெடி விப‌த்ததில் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது. ஆறுக்கும் மேற்பட்டோர் வீட்டின் இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதாகத் அஞ்சப்படுகிறது. கிடங்கு உரிமையாளர் நிர்மல் ஜெயின் (Warehouse owner Nirmal Jain) மற்றும் அவரது குத்தகைதாரர்களும் கட்டிடத்தில் இருந்தனர். பன்மோர் நகரில் உள்ள ஜெய்த்பூர் சாலையில் உள்ள கிடங்கில் வெடிவிபத்து நடந்தவுடன், சுற்றி இருந்தவர்கள் பீதியடைந்தனர். சில குத்தகைதாரர்களும் அதே வீட்டில் வசித்து வந்தனர். பன்மோர் காவல் நிலையத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலி, ஒருவர் காணவில்லை, 7 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடி விபத்திற்கு பிறகு 6க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர் (More than 6 children, women and men were trapped under the debris). இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு பணி தொடங்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவில் உள்ள பட்டாசு கிடங்கில் (At a cracker warehouse in Morena, Madhya Pradesh) ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஆட்சியர் பக்கி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆனால் வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆறுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கிடங்கு உரிமையாளர் நிர்மல் ஜெயின் மற்றும் அவரது குத்தகைதாரர்களும் இதே பிளாக்கில் வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.